• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

Byகாயத்ரி

Nov 25, 2021

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யலாம் என்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் மேற்கு வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும். இதனால் தென் தமிழகம், கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.


தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.