அரியலுார் .தமிழ்நாடு முதலமைச்சர், மு.க ஸ்டாலின் ஆணைக் கிணங்க, திராவிடப் பொங்கல்’ விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திமுக சார்பில் ஒன்றியம், நகரம் அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

அதன்அடிப்படையில் அரியலூர் மத்திய ஒன்றிய திமுக சார்பில் வாலாஜாநகரம் ஊராட்சியில் நடைபெற்ற கைப்பந்து போட்டியினை, மாவட்ட திமுக செயலாளர் , போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி .சிவசங்கர் தொடக்கி வைத்தார்.தொடர்ந்து நடந்த கைப்பந்து போட்டிகளில் பள்ளி மாணவர்களின் 11 அணிகள் ,மாணவியர்கள் 05 அணிகள் கலந்து கொண்டு மோதின . இறுதியில் வென்ற அணிகளுக்கு முதல் , இரண்டாம், மூன்றாம் , நான்காம் பரிசுகள் , கோப்பை கள்வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், அரியலூர் சட்டமன்ற தொகுதி மேலிட பொறுப்பாளர் பா. வளவனூர் அன்பரசன்,அரியலூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் தெய்வ.
இளையராஜன், அரியலூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோ, அறிவழகன், அரியலூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மா அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் இரா .பாலு, மாவட்ட திமுக தொண்டர் அணி துணை தலைவர் சாஸ்திரி நகர் ஆனந்த் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.





