சென்னை, வானகரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அக்கட்சியின் கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும், அதற்கு தயாராவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
கூட்டத்தில் நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக கபட நாடகம் ஆடுகிறது என கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடிமராமத்து பணி, தடுப்பணைகள் கட்டும் பணி போன்றவற்றை திமுக அரசு முறையாக செய்யவில்லை எனவும் கண்டனம். டங்ஸ்டன் சுரங்க அனுமதியை கைவிட வேண்டும் என , மத்திய அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதற்கும் எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…….
நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதிமுக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது கூட்டணி சரியாக அமையவில்லை என்று கூறினார்கள் கூட்டணி வரும் போகும் ஆனால் கொள்கை நிலையானது தமிழகத்தில் தனித்து நின்று ஆட்சி அமைத்த ஒரே கட்சி அதிமுக தான் என்று கூறினார்.
மேலும் அவர் 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாகவும் தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும் என்று வாக்குறுதி அளித்த எடப்பாடி 2026 சட்டமன்ற தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும் சவால் விடுத்துள்ளார்.