• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Byகிஷோர்

Nov 22, 2021

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையின் வாட் வரியை குறைத்தும், மத்திய அரசு பரிந்துத்தும், விலையை குறைக்காமல் ஆட்சி புரியும் தமிழக அரசை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மற்ற மாநிலங்களில் மற்ற மாநில அரசுகள் ரூபாய் 10 வரை பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளது ஆனால் தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திமுக அரசு விலையை குறைக்காமல் மக்களை கஷ்டப்படுத்தி வருகிறது. இத்தகைய போக்கை கைவிட்டு பெட்ரோல் டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இளைஞர் அணி மாவட்ட தலைவர் சீதாராமன் தலைமையில், கிழக்கு மாவட்ட தலைவர் கஜேந்திரன் , செயலாளர் பொன்ராஜன், மேற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், அரசு தொடர்பு துறை துணை தலைவர் பாண்டுரங்கன், மாநில இளைஞரணி துணை தலைவர் சிவபாலன், மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பூமாலை ராஜா. இளைஞரணி மாவட்ட செயலாளர் மணிமாறன்,கேசவன், இராணுவ பிரிவு மாநில தலைவர் கர்னல் பாண்டியன், மாவட்ட மகளிரணி தலைவி காளீஸ்வரி, சிறப்புரை ஆற்றினர். மேற்கு மாவட்ட மகளிரணி சந்தனமாரி நன்றி கூறினார்.