• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேனியில் மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Byvignesh.P

Jun 10, 2022

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு , மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு , மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,மாவட்ட தலைவர் போஸ் மலைச்சாமி, மாவட்ட செயலாளர் பி.எம்.சுதர்சன் ஆகியோர் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் மாணிக்க பெருமாள், மக்கள் நலப் பணியாளர்கள் சங்க தேனி ஒன்றிய நிர்வாகிகள் விஜயலட்சுமி, திலகவதி, பெரியகுளம் ஒன்றிய நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ராஜாமணி, கடமலை ஒன்றிய நிர்வாகிகள் பழனி முருகன், தமிழன், ஆண்டிபட்டி ஒன்றிய நிர்வாகிகள் நடராஜ், அசோக்குமார், சின்னமனூர் ஒன்றிய நிர்வாகிகள் மணிவேல், சுசீலா, உத்தமபாளையம் ஒன்றிய நிர்வாகிகள் ஆரோக்கியராணி, பழனிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மக்கள் நலப்பணியாளர்களுக்கு , இனி யாராலும் எவராலும் பணி நீக்கம் செய்யப்படாத வகையில் நிரந்தரப் பணி வழங்கப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். மக்கள் நலப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக, தேனி ஒன்றிய நிர்வாகி பாக்கியலட்சுமி நன்றியுரையாற்றினார்.