• Mon. Jul 1st, 2024

மூன்று குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சி

ByJeisriRam

Jun 28, 2024

தேனி மாவட்டம், தோடி தாலுகா, மாணிக்கபுரம், கிழக்கு தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

போடி தாலுகா, மாணிக்கபுரம் கிராமத்தில் 66 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

எங்கள் ஊர் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி மறுப்பு, தெருவில் நடந்து செல்ல அனுமதி மறுப்பு, தண்ணீர் பிடிக்க கூடாது, மற்ற குடும்பத்தினருடன் பேசக்கூடாது, மூன்று குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தால் சுடுகாட்டில் புதைக்க கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் மூன்று குடும்பங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக கார்த்திக் என்பவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கார்த்திக் உள்ளிட்ட ஆறு பேரை காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *