• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆந்திராவில் 50% இருக்கை அனுமதி அமுலுக்கு வந்தது

கொரோனா மூன்றாவது அலை பரவல் அதிகமாகி வரும் சூழ்நிலையில் பல மாநிலங்களில் அடுத்தடுத்து புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கான அனுமதி கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்நிலையில் ஆந்திராவிலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அம்மாநில அரசு நேற்றுஅறிவித்துள்ளது. இன்று முதல் இது அமலுக்கு வருகிறது.

இதன் காரணமாக பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ள சில தெலுங்குப் படங்கள் சிக்கலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் ஏற்கெனவே டிக்கெட் விலை மிகவும் குறைக்கப்பட்டுள்ளதால் திரையுலகினர் கடும் சிக்கலில் உள்ளார்கள். இந்நிலையில் 50% இருக்கை என்பது அவர்களது வருவாயை மேலும் குறைத்துவிடும்.தென்னிந்திய மாநிலங்களில் இன்னும் தெலங்கானாவில் மட்டும் 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களில் காட்சிகள் நடைபெற்று வருகிறது. அங்கும் விரைவில் 50 சதவீத இருக்கை அனுமதி என்ற அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். இன்னும் ஓரிரு மாதங்களாவது இந்த நிலை நீடிக்கலாம் எனத் தெரிகிறது.”