கன்னியாகுமரியில் அறநிலையத் துறைக்கு உட்பட பல இடங்களை 50 ஆண்டுகளுக்கு மேலாக குத்தகை அடிப்படையில் வாடகைக்கு எடுத்து பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த அடிப்படையில் குமரி மாவட்ட தேவஸ்தானத்திற்கு சொந்தமான ‘கன்னியம்பலம்’ என்ற ஒரு கல்மண்டபம் உள்ளது. இந்த கல்மண்டபத்தின் முன்,பின் மற்றும், பக்கவாட்டில் என மொத்தம் 9_ கடைகள் கடந்த 42 ஆண்டுகளாக கடை நடத்தும் கடைகள் குறித்து.

மதுரை நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை பதிவு செய்த நிலையில். வழக்கு கொடுத்தவர்கள் கன்னியப்பலம் என்ற மண்டபத்தின் தெற்கு, வடக்கு வாசல்கள் திறந்தே இருந்தது. பக்தர்கள் அவர்களது பயன்பாட்டு இடமாக இருந்ததை போன்று பொது நிலை பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என தொடுத்த வழக்கில் இரண்டு நீதிபதிகளை கொண்ட பென்ஞ். கன்னியப்பத்தின் பக்கவாட்டில் உள்ள கடைகளை (செப்டம்பர்_30)ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்ற நீதிமன்றம் உத்தரவை தேவஸ்தானம் அதிகாரிகள் இன்று நடவடிக்கை எடுக்க காவல்துறை,ஜெசிபி வாகனத்துடன் வந்த நிலையில்.

கன்னியாகுமரியில் உள்ள அனைத்து வியாபார சங்கங்களை சார்ந்தவர்கள்.
தேவஸ்தானம் கடைகளை அகற்றும் முயற்சியை கண்டித்து அனைத்து கடைகளையும் அடைந்ததுடன்.
கன்னியம்பலம் என்ற கல்மண்டபத்திற்குள் அமர்ந்து ஆர்பாட்டம் நடத்திய நிலையில்.
தேவஸ்தானம் அதிகாரிகள், மற்றும் வியாபார சங்கங்களை சேர்ந்த தலைவர்களின் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில், நவராத்திரி திருவிழாவின் காரணமாக நீதிமன்றங்களுக்கு விடுமுறை என்பதால்.எதிர்வரும் 06.10.25. திங்கள் கிழமை நீதிமன்றத்தை நாடும் வகையிலான வகையில் தேவஸ்தான அதிகாரி அவகாசம் கொடுத்ததால். போராட்டத்தை கை விட்டு கலைத்து சென்றனர்.
கன்னியாகுமரி கடற்கரை,சன்னதி தெரு, தேரோடும் வீதிகளில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.