பத்மனாபபுரம் தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்
இந்நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுகதாமோகன், முதுகலை ஆசிரியர் கிருஷ்ணமணி, மாவட்ட துணைத்தலைவர் ஜோண்ஸ்இமானுவேல், தக்கலை வட்டார தலைவர் பிரேம்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் பால் D சைலஸ், மாவட்ட செயலாளர் ஷாகுல் ஹமீது, குமாரபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜாண்கிறிஸ்டோபர், நகர காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் அம்ஜத்கான், நகர செயலாளர் யாசின் அராபத், நகர சிறுபான்மை துறை முன்னாள் தலைவர் பீர்முஹமது, பத்மனாபபுரம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜாண்பிரிட்டோ, விஜயகுமார், நாகர்கோவில் கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜோசப் ரன்ஸ்டெட் பிரீஸ் மற்றும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.