• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

ஒரு வழியா மாநாடு வெளியாகிடுச்சு….

Byகாயத்ரி

Nov 25, 2021

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார்.

படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சனைகள் தான். இன்று (நவம்பர் 25) மாநாடு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு வழியாக நீண்ட நாட்களுக்கு பின்னர் சிம்புவின் திரைப்படம் வெளியாகுவதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

படத்திற்கு டிக்கெட் புக்கிக் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் மாநாடு திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் பதிவிட்டார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் சில மணி நேரங்களில் மாநாடு திரைப்படம் வெளியாவதில் இருந்த சிக்கல் பேசி முடிக்கப்பட்டதால் திட்டமிட்டப்படி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


அதன்படி மாநாடு திரைப்படம் இன்று வெளியானது. மாநாடு திரைப்படம் இன்று காலை 5 மணிக்கு சிறப்பு காட்சியுடன் வெளியாக இருந்தது. ஆனால் லைசென்ஸ் விநியோகத்தில் உள்ள சிக்கல் காரணமாக அதிகாலை காட்சிகள் திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலை 6 மணி வரை சிறப்பு காட்சி வெளியாகமல் உள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனிடையே பல திரையரங்குகளில் காலை 8 மணி காட்சிகள் தொடங்குகின்றன.