திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கருத்து வேறுபாடு காரணமாக மனைவியின் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கணவர். உயிருக்கு போராடிய நிலையில் மனைவி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஜெயப்பிரகாஷ் வீதியில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருபவர் தினேஷ் குமார் தேன்மொழி தம்பதியினர் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகளப்பாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த தினேஷ் அருகில் இருந்த கட்டையை எடுத்து மனைவி தேன்மொழியை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது தேன்மொழியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த தேன்மொழியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்க அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தேன்மொழியின் கணவரான தினேஷை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடம் அருகே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மீது சரமாரி தாக்குதல் நடத்திய கணவனை பிடித்து போலீசார் விசாரணை செய்து வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.