• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு விழா – கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பு

ByG.Suresh

Feb 26, 2024

என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் எலக்ட்ரானிக் ஓட்டிங் மிஷின் மூலம் இதுவரையில் எந்த விதமான தவறுகளும் நடக்கவில்லை என்று கார்த்தி சிதம்பரம் சிவகங்கை பேட்டி..,

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தபோது கோயம்புத்தூரில் இருந்து மீண்டும் ஒரு விக்கெட் விழும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து கேட்டதற்கு இது என்ன கிரிக்கெட் மேட்ச்சா என்று எதிர் கேள்வி எழுப்பிய கார்த்தி சிதம்பரம்,

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையை முழுமையாக நான் ஏற்றுக் கொள்கிறேன். அவருக்கு என்னுடைய முழு ஒத்துழைப்பு இருக்கும் – கார்த்தி சிதம்பரம்

கட்சியிலிருந்து யார் விலகி சென்றாலும் எனக்கு வருத்தம் அளிக்கிறது. சிவகங்கை அடுத்துள்ள காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.