• Sat. Apr 20th, 2024

உதகையில் வனத்துறை அமைசசர் தலைமையில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம் உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி அமரித் முன்னிலையில் நடைப்பெற்றது.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு வனத்துறை அமைச்சர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து வனத்துறை அமைச்சர் உலக எய்ட்ஸ் தினம் 2022 சமப்படுத்துதல் என்கின்ற உறுதிமொழியினை வாசிக்க அனைத்து அரசு தலைமை சார்ந்த அலுவலர்கள் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய வனத்துறை அமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி உலக எய்ட்ஸ் அதிகமாக அனுசரிக்கப்படுகிறது இந்நோயை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி இன்றைய தினம் நமது மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடத்தப்பட்டது என்றார்.
இதனை தொடர்ந்து வனத்துறை அமைச்சர் தற்காலிக இயலாமைக்காண உதவி தொகை 16 பயணிகளுக்கு மாதந்தோறும் பெறுவதற்கான ஆணையினையும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மூன்று பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கி சமபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, இணை இயக்குனர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனபிரியா, துணை இயக்குனர் பாலுசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், உதகை வட்டாட்சியர் ராஜசேகரன், மாவட்ட திட்ட அலுவலர் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அறிவழகன் உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *