

கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்,நெற்பயிர்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கோட்டை மலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு விலங்குகளால் விளைபொருட்கள் நாசமடைந்து வருவதற்கு வனத்துறையினர் ஒத்துழைப்பு இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
இது பற்றிய விவரமாவது கடையநல்லூர் ஊருக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் உள்ளது மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகும் நீர்வீழ்ச்சி மற்றும் ஆறுகளால் அப்பகுதிகளில் விவசாயம் செழிப்படைந்து வருகிறது அடிவாரத்தை ஒட்டி கல்லாற்று பகுதி பரமேஸ்வரன் குளம் பார்வதி குளம் மற்றும் பல குளத்து பாசன பரவுகள் அரிவாள் தீட்டி ஆறு சின்னாறு பெரியாறு ஸ்ரீவல்லபன் கால்வாய் என ஆற்று பாசனப் பகுதிகளிலும் தற்போது சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நெல் மற்றும் வாழை தென்னை பயிரிடப்பட்டுள்ளனர். கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் தென்காசி குற்றாலம் கடையநல்லூர் சொக்கம்பட்டி பகுதியை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நீர் வரத்து தொடங்கியுள்ளது கோடை காலங்களில் ஏற்கனவே மழையில் வாழும் காட்டு விலங்குகள். மான் மற்றும் யானைகள் நீருக்காக அவ்வப்போது வயல் பகுதிகளுக்கு வருவதுண்டு அப்போது யானைகள் கூட்டமாக சேர்ந்து தென்னந்தோப்பு கொய்யா மற்றும் வாழைத்தோட்டங் களில் புகுந்து விளை பொருட்களை வீணடித்து விடும்.
அப்போது விவசாயிகள் ஒன்று சேர்ந்து வனத்துறை அதிகாரிகள் வேட்டை தடுப்பு காவலர்கள் மூலம் வெடி வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டி விடுவர்சில நேரங்களில் வனத்துறையின் கூட்டு முயற்சியால் விளைபொருட்களை நாசம் செய்யும் யானை கூட்டத்தை கலைத்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது கடையநல்லூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த மோதினார் என்பவர் மகன் அபூபக்கர் சித்திக் என்பவருக்கு சொந்தமான சுமார் 11 ஏக்கர் வயல் மற்றும் தோப்புகள் உள்ளது இதில் நெல் மற்றும் வாழை தென்னை ஆகியவை பயிரிட்டுள்ளார்.கடந்த வாரம் நான்கு ஏக்கருக்கு மேற்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்ய இன்னும் பத்து பதினைந்து நாட்கள் உள்ள நிலையில் நன்கு விளைந்த நெற்பயிர்களை யானைக் கூட்டம் வயல்வெளியில் வலம் வந்து அழிச்சாட்டியம் செய்தது அங்கு வேலை செய்யும் விவசாயிகள் மற்றும் காவலாளிகள் ஒன்று சேர்ந்து யானைகளை விரட்டி உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் வனதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர் வனத்துறையினர் பகல் நேரங்களில் மட்டும் வந்து சுற்றி விட்டு செல்கின்றனர் யானை கூட்டம் இரவு நேரங்களில் வருவதால் எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் விவசாயிகள் தொழிலாளிகளின் துணையுடன் யானை கூட்டத்தை தீப்பந்தம் வைத்து விரட்டுகின்றனர் யானைக் கூட்டத்தால் நான்கு ஏக்கர் பரப்பளவில் சுமார் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள நெற்பயிர்கள் நாசமானதால் அபுபக்கர் சித்திக் மற்றும் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர் வனத்துறை ஒத்துழைப்பும் இல்லாததால் தங்களுக்கும் விவசாய விளைபொருள்களுக்கும் பாதுகாப்பில்லை என விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர் தென்காசி மாவட்ட ஆட்சி நிர்வாகமும் தமிழக அரசும் விவசாயிகள் நலன் காக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுபடி உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்
