• Thu. Apr 24th, 2025

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை ஊக்குவித்த இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி மகாராஜா…

ByG.Suresh

Mar 26, 2025

சிவகங்கையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவித்து கல்வி உபகரணங்களை இராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி மகாராஜா வழங்கினார்.

சிவகங்கையில் உள்ள அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.ஆர்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் 2025 ஆண்டின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ள பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி மகாராஜா ஆலோசனை வழங்கினார்.

இராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி மகாராஜா மாணவ மாணவிகளிடம் பேசுகையில்..,

வழிச்சாலையில் வேகத்தடைகளை நிதானமாக கடந்து பயண இலக்கை பாதுகாப்பாய் அடைவதைப்போலவே கல்விப் பயணத்தில் தேர்வுப் படிக்கட்டுகள்.தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் பொதுத்தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் மாணவர்கள் தேர்வை கண்டு அஞ்ச வேண்டாம் என்றும் துணிச்சலாக தேர்வை எதிர்கொண்டு அனைவரும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார் இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் நகர் மன்ற உறுப்பினர் மகேஷ் உட்பட கலந்து கொண்டனர்.