• Fri. Apr 19th, 2024

நீலகிரி அருகே காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி

நீலகிரி மாவட்ட நாடுகாணி அருகேயுள்ள காரக்கொல்லி வனப்பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டும், டிரோன் கேமிரா மூலம் பிஎம். 2 அரிசி ராஜா யானையை 50க்கும் மேற்ப்பட்ட வனத்துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் தகவல்…

கூடலூர் தாலுகா தேவாலா வாளவயல் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி (வயது 56) என்பவர் கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த போது காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்தால் தேவாலா பகுதி மக்கள் கடும் அச்சமடைந்தனர். தொடர்ந்து பிஎம் 2 அரிசி ராஜா காட்டு யானை வீடுகள், கடைகளை உடைத்து உணவு பொருட்களை தின்று பழகி விட்டது. எனவே அதைப் பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து பிஎம். 2 அரிசி ராஜா காட்டு யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், காட்டு யானை தற்போது நாடுகாணியை அடுத்த காரக்கொல்லி வனப்பகுதியில் உலா வருவதாக நேற்று வனத்துறையினருக்கு தெரிய வந்துள்ளதையடுத்து அப்பகுதியில் 50 க்கும் மேற்ப்பட்ட வனத்துறையினர், 4 கால்நடை மருத்துவர் கண்காணித்து, வனப்பகுதியில் இடைவெளி அதிகம் உள்ள இடத்திற்கு யானை வரும் போது மயக்க ஊசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், யானை பிடிப்பட்ட பிறகு மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு 33 சதவீதம் வனப்பகுதியை அதிகப்படுத்த தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக வனப்பகுதிக்கு வெளியே இந்தாண்டு 8.5 கோடி மரக்கன்றுகளும், அடுத்த ஆண்டு 7.5 கோடி மரக்கன்றுகளும், 2024ம் ஆண்டு 15 கோடி மரக்கன்றுகளும், 2025ம் ஆண்டு 25 கோடி மரக்கன்றுகள் நடப்படவுள்ளதாக தெரிவித்த அவர், வனப்பகுதிக்குள் இடைவெளியுள்ள பகுதிகளில் விதைப்பந்துகள் மூலம் மரக்கன்றுகள் தூவப்பட்டு அடர்த்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *