

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் சிறப்பு கூட்டம் நகர் மன்ற துணை தலைவர் தேன்மொழி, நகராட்சி ஆணையாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்க சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து நகராட்சி சார்பில் தடையில்லா சான்று வழங்க ஒப்புதல் அளிக்க கோரி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயக்குமாருக்கும் அந்த அந்த கட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும் தமிழ்நாடு அரசின் வரி உயர்வை கண்டித்து அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக கூட்ட அறைவிட்டு வெளியே வந்துவிட்டு, அடுத்த நொடியே மீண்டும் கூட்ட அறைக்குள் சென்று வெளிநடப்பு நாடகத்தை அரங்கேற்றியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.,

