மதுரை மாவட்டம் பரவையில் உள்ள மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி SIRD – RRGSA திட்டம் உடன் இணைந்து எளிய இரசாயனப் பொருட்கள் தயாரிப்பு குறித்த ஒருநாள் திறன் பயிற்சி தோடனேரி கிராமத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சியின் போது, பங்கேற்பாளர்களுக்கு சோப்பு, பினாயில், ஷாம்பு, வாஷிங் பவுடர், முகப்பொடி, பற்பொடி, டிஷ்வாஷர், சோப்ப்ஆயில், கம்ப்யூட்டர் சாம்பிராணி ஆகிய பொருட்களை தயாரிக்கும் முறை படிப்படியாக விளக்கப்பட்டு, நடைமுறை பயிற்சியும் வழங்கப்பட்டது.இதற்கான மூலப்பொருட்கள், தயாரிப்பு முறை, செலவுக் குறைவு, மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. கிராம மக்கள், குறிப்பாக பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, கற்றுத் தரப்பட்ட திறன்களை தங்களது வீட்டிலும் சிறு தொழில்களிலும் பயன்படுத்தும் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
இந்தப் பயிற்சி ஓய்வுபெற்ற MSME பயிற்சியாளர் ஜோசப் மூலம் கற்பிக்கப்பட்டது. நிகழ்ச்சி நிறைவில் பங்கேற்பாளர்கள் அனைவரும் திருப்தி தெரிவித்ததுடன், இத்தகைய திறன் பயிற்சியை கிராமத்திற்கு கொண்டு வந்து வழங்கிய கல்லூரி மற்றும் SIRD – RRGSA திட்டத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.வணிகவியல் துறை தலைவர் முனைவர் ஜெஸ்டினா ஜெயக்குமாரி, பேராசிரியர்கள் முனைவர் தேன்மொழி,முத்தமிழ்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.











; ?>)
; ?>)
; ?>)