• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார் தீவிர வாகன சோதனை..,

ByPuthar Pandian P

Mar 12, 2026

திண்டுக்கல் மாவட்ட எல்லையான பள்ளபட்டி பிரிவு என்ற இடத்தில் போலீஸ் சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி இந்த போலீஸ் சோதனை சாவடியில் அம்மைய நாயக்கனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சடவமுத்து தலைமையில் போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 16 வீரர்கள் இணைந்து வாகன சோதனை, தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய பணியில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் – மதுரை செல்லும் நான்கு வழிச் சாலையில் பள்ளபட்டி பிரிவு என்ற இடத்தில் வாகன சோதனை, தேர்தல் பாதுகாப்பு பற்றிய விழிப்புனர்களை ஏற்படுத்தி வந்தனர். போலீஸ் சோதனை சாவடியில் திடீர் சோதனையால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.