• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ராஜீவ்காந்தி கொலை வழக்கு – ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல்

Byமதி

Nov 15, 2021

மதுரை மத்திய சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க தமிழக சிறைத்துறை அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் உள்ளார். சிறையிலுள்ள ரவிச்சந்திரன் மற்றும் அவரது தாய் தரப்பில் ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்கி வழங்கி உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தபோது கோரிக்கை மனு மற்றும் கடிதம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோலில் வெளியே செல்ல தமிழக சிறைத்துறை உத்தரவை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 8 மணி அளவில் மதுரை மத்திய சிறையில் இருந்து ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வந்தார்.

ரவிச்சந்திரனுக்கு குடும்பத்தினரை சந்திப்பது மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட காரணங்களுக்காக பரோல் வழங்கப்பட்டது. 15 ஆம் தேதியான இன்று வெளியே வரும் அவருக்கு அடுத்த மாதம் 15ஆம் தேதி வரைக்கும் பரோல் வழங்கப்பட்டுள்ளது.