• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

முல்லை பெரியாற்றில் மீன் குஞ்சுகளை விடும் திட்டம்..,

BySubeshchandrabose

Sep 26, 2025

தேனி வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் விடும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

ஆறுகளில் உள்நாட்டு மீன் வளர்ப்பை பெருக்கும் நோக்கில் தமிழக அரசின் மீனவ நலத்துறை மற்றும் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதி உதவியுடன் ஆற்று நீரில் மீன் குஞ்சுகள் இருப்பு வைக்கும் திட்டம் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த திட்டப்படி, விரலிகளாக வளர்க்கப்பட்ட சேல் கொண்டை, கல்பாசு கொண்டை, பெருங்கெண்டை வகைகளாக கட்லா, ரோகு, மீர்கால் மீன் குஞ்சுகள் இருப்பு வைப்பதற்காக தேனி வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் விடப்பட்டன.

தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் நடந்த நிகழ்வில் நிகழ்வில் தேனி மாவட்ட மீன்வளத்துறையினர் மற்றும் உள்ளாட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தேனி மாவட்டத்தில் சுருளியாறு, வைகையாறு, முல்லைப் பெரியாற்றில் மூன்று லட்சம் மீன் குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.