• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடியில் சிறைபிடிக்கப்பட்ட குளச்சல் பகுதி மீனவர்கள் 86 பேரை மீட்ட எம்பி விஜய்வசந்த்

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 86 பேர் மற்றும் அவர்களின் விசை படகுகள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் சிறைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று விஜய் வசந்த் எம்பி அப்பகுதிக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களையும் அவர்களின் விசைப்படகுகளையும் மீட்டு குமரிக்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் மீனவர்களை விடுவித்ததற்கு நாங்கள் தான் முழு முயற்சி எடுத்தோம் என கூறி மீனவர்களை இன்று குளச்சலில் வரவேற்க சென்ற பாஜகவினரை மீனவ கிராம மக்கள் விரட்டியடித்தனர்.