• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சுதந்திர தின வாழ்த்தை வீடியோவுடன் தெரிவித்த எம்.பி.ராகுல் காந்தி..

Byகாயத்ரி

Aug 15, 2022

இந்திய சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் தனது வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 75-வது சுதந்திரதின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறார்கள். டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து, மக்களுக்கு உரையாற்றினார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு மக்களுக்கு சுதந்திரன வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“ இந்தியத் தாய்க்கு, நாங்கள் மிகவும் நேசிக்கும் தாய்மண் பழமையானது, நிரந்திரமானது, எப்போதும் புதுமையாக இருக்கக்கூடியது. இதற்கு நாங்கள் எங்கள் மரியாதைக்குரிய வணக்கத்தைச் செலுத்துகிறோம். பாரத தாயின் சேவைக்கு எப்போதும் இணைந்திருப்போம். அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள், ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார் அதில் பதவிட்டுள்ளார்.