தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள செல்லம்பட்டி ஆற்றங்கரை பாலம் ஓரமாக சோழபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஓரமாக எரிந்து கொண்டிருந்த குப்பை புகை மூட்டத்தில் இருந்து மர்ம பொருள் வெடித்து சிதறியதில் அந்த வழியாக சென்ற சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் குருசாமி 32, என்பவர் மீது மற்றும் சாலை ஓரமாக நடந்து சென்ற பொது மக்கள் மீது வெடித்து சிதறியதில் பலர் காயமடைந்தனர்.

இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த குருசாமி ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சாலை ஓரத்தில் கொளுத்தப்பட்ட குப்பையில் இருந்து மர்ம பொருள் வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.







; ?>)
; ?>)
; ?>)
