இராஜபாளையம் தொகுதியில் இன்று (23.03.2025) மாலை 6 மணியளவில் திமுக சார்பில் ஆயிஷா பள்ளிவாசலில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன்

சிறுபான்மையினரின் நலன் காக்கும் முதலமைச்சர் நமது தமிழ்நாடு முதலமைச்சர் தான். மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுபேற்றவுடன் கடந்த ஆட்சியில் இஸ்லாமிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்தவர், எப்போதும் தமிழ்நாடு முதலமைச்சர் சிறுபான்மையினர் மக்களின் பாதுகாவலராக இருப்பார் எனக்கூறி, அனைத்து இஸ்லாமிய பொதுமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்களைக் கூறினார்.


இந்நிகழ்வில் நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்த், நிர்வாகிகள் உதுமான், இக்சாஸ் ரபீக், சபினாபேகம் நைனார்முகமது, அப்சர்அலி, நாகூர்அலி, அராபத் உசேன் சிராஷ், பேங்க்நிஷார் சையதுசேது கவுன்சிலர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






