• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

டாஸ்மார்க் கட்டிடம் நெல்மணிகளுக்கு திறந்தவெளி கிடங்கா?

ByKalamegam Viswanathan

May 13, 2025

உயிரைக் குடிக்கும் டாஸ்மார்க் சரக்கு பாதுகாப்பாக கட்டிடம் ஏழைகள் உண்ணும் நெல்மணிகளுக்கு திறந்தவெளி கிடங்கா பொதுமக்கள் கொந்தளிப்பு
மதுரை மாவட்டம் கப்பலூர் நான்கு வழி சாலை அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் செயல் பட்டு வருகிறது.

இதில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்கள் சேமிக்கும் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இதில் பல இடங்களில் நெல் மூடைகள் மழையிலும் வெயிலிலும் நனைந்தும் காய்ந்தும் வருகிறது. கடந்த 10 நாட்களாக தொடர்ந்து நான் கண்காணித்து வந்ததில் அதிகாரிகள் இன்று நடவடிக்கை எடுப்பார்கள். நாளை நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்த்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது அப்பொழுது திறந்த வெளியில் வைத்திருந்த நெல் மூடைகள் நனைந்து சுமார் 500க்கும் நெல்முறைகள் நனைந்து வீணாய் போகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில், மக்கள் உயிரை குடிக்கும் டாஸ்மாக் மதுபான குடோன் எதிரே உள்ளது. அதற்கு பாதுகாப்பான கான்கிரீட் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஏழை பாழைகள் ஒன்னும் நெல்மணிகள் நனைந்து வருவது மனதை வேதனை அடைய செய்கிறது என குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அலட்சியப் போக்குடன் செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக நெல் மூடைகள் மழையிலும் வெயிலிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாக்க வேண்டும் என்பதை அனைவரிடமும் எதிர்பார்ப்பாக உள்ளது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா????