மத்திய பாஜக அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல்லில் கொட்டும் மழையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக நூதன போராட்டம் நடைபெற்றது.

செவ்வாயன்று காலை திண்டுக்கல் ஸ்கேன் சென்டர் அருகில் இருந்து இளைஞர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை தள்ளிக்கொண்டு கொட்டும் மழையில் பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.

பின்னர் பேருந்து நிலையத்தில் பாஜக மோடி அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணை மேலாளர் பால சந்திரபோஸ் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் கே ஆர் பாலாஜி மாவட்ட தலைவர் விஷ்ணுவர்தன் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முகேஷ் மற்றும் நிர்வாகிகள் நிருபன் வாசு சிலம்பரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.