கடையநல்லூரைச் சார்ந்த கணவன்மனைவி இருவரும் விபத்தில் பலி இரு பெண் குழந்தைகள் தவிப்பு. தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த தம்பதிகள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் பார்ப்பவர்களின் நெஞ்சை கலங்க வைத்தது.
இது பற்றிய விவரம் ஆவது, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியைச் சார்ந்தவர் மாடசாமி மகன் சசிகுமார் வயது(42) இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் இவரது மனைவி அன்னலட்சுமி வயது(3 2) இவர் வீட்டிலிருந்து பீடி சுற்றுகிறார். அன்னலட்சுமிக்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஆகும் தம்பதிகளுக்கு சீமா (12), அபிநயா (11) என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று கணவன் மனைவி இருவரும் தனது குழந்தைகளோடு அன்னலட்சுமிக்கு சொந்த ஊரான திருத்தங்கலுக்கு சென்றனர். அங்கிருந்து குழந்தைகளை மட்டும் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு கணவருடன் இருசக்கர வாகனத்தில் அவரது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக அருப்புக்கோட்டை சென்று விட்டு நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருத்தங்கல் திரும்பும் பொழுது அருப்புக்கோட்டை அருகில் உள்ள பொய்யான்குளம் கிழக்கு பாலம் அருகே அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
தூக்கி வீசப்பட்ட அன்னலட்சுமி தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார். வண்டியை ஓட்டிச் சென்ற அவரது கணவர் சசிகுமார் உயிருக்கு போராடிய நிலையில் அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.