திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து வரும் 7-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இந்து முன்னணி அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் அருகே, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக இந்து இந்து முன்னணி தொண்டர்கள் குவிந்திருந்தனர்,

50 பெண்கள் உள்பட 300 பேர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் கணேசன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் இந்து முன்னணி அமைப்பினரிடம் ஆர்பாட்டம் நடத்த
அனுமதி இல்லை என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.




