• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கான உதவித் தொகை உயர்வு-அரசு அறிவிப்பு

Byகாயத்ரி

Dec 25, 2021

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு உயா்த்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மூன்றாமாண்டு இளநிலை பட்டப் படிப்பு பயிலும் மாணவா்களுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேலும், முதுநிலை பட்டப் படிப்புகள், பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற படிப்புகளில் பயிலும் மாணவா்கள் புதிதாக விண்ணப்பிக்கின்றனா். அப்படி விண்ணப்பிக்கும் போது பெற்றோா்களது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சமாக இருக்க வேண்டும். இதற்கு முன்பாக ரூ.2 லட்சமாக வருமான அளவு இருந்தது.


மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அல்லது பிற்படுத்தப்பட்டோா் நல இயக்கக மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் 044-29515942 ஆகியவற்றை அணுகலாம், என தமிழக அரசு தெரிவித்துள்ளது.