• Wed. Apr 24th, 2024

வாய்விட்டு மாட்டிக்கொண்ட முன்னாள் அமைச்சர் சீனிவாசன்

ByIlaMurugesan

Nov 9, 2021

தமிழகத்தில் அவ்வப்போது அரசியல்வாதிகள் வாய்விட்டு மாட்டிக்கொள்ளுவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, முல்லை பெரியார் அணையைப் பற்றி அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசி மாட்டிக் கொண்டார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை மீட்க கோரி திண்டுக்கல் – திருச்சி சாலையில் கல்லறைத் தோட்டம் அருகே அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் செய்தியாளரிடம் பேசுகையில், முல்லைப்பெரியார் அணை உறுதியாக உள்ளது என்பதால் 152 அடி உயரத்திற்கு தண்ணீர் நிறுத்திக் கொள்ளலாம் என கடந்த அதிமுக ஆட்சியில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது என்றார்.

இதனையடுத்து அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் முல்லைபெரியாறு அணையில் ஏன் 152 அடி உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த சீனிவாசன், மழை பெய்தால் தான் தண்ணீர் உயரும். எங்க ஊரில் தான் நீ இருக்கிற இப்படி கேள்வி கேட்டா நாங்க என்ன பண்றது என்று கேள்வி கேட்ட நிருபரை பார்த்து சீனிவாசன் கேள்வி எழுப்பினர்.

பின்னர் தொடர்ந்த அவர் முதலில் 132 அடி தான் தண்ணீர் தேக்கப்பட்டது. 142 அடியில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுத்தது புரட்சி தலைமை அம்மா தான். 152 அடி வரை தண்ணீர் உயரவில்லை. இப்போது வந்தால் உயர்த்திக் கொள்ளலாம் என்றார்.

மீண்டும் நிருபர் கேள்வியை தொடர்ந்தார். நடவடிக்கை எடுக்கவில்லை என்ற போது வாய்க்கால் வெட்டவில்லை, தண்ணீர் வரவில்லை. தண்ணீர் வந்தால் தேக்கலாம். 152 அடி உயர்த்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் உத்தரவு வாங்கியுள்ளோம் என்ற சீனிவாசன் உடனடியாக பேட்டியை முடித்துக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *