• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு

ByA.Tamilselvan

Jan 18, 2023

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதிவிக்காலம் பாரளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீட்டிப்பு செய்து அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமித்ஷா அறிவிப்பு.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் முன்று ஆண்டு பதவிக்காலம் இந்த மாதம் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் பாஜக செயற்குழு கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று பாஜக தலைவரின் பதவி நீட்டிப்பு குறித்த அறிவிப்பை மூத்த தலைவர் அமித் ஷா வெளியிட்டார். பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலத்தை ஜூன் 2024 வரை நீட்டிக்க பாஜக தேசிய செயற்குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பின்போது அமித் ஷா கூறினார். 2019 மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றியை விட, பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் நட்டா தலைமையில், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரும் வெற்றி பெறும் என்றும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.