• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டோலிவுட் செல்லும் ‘டாக்டர்’ புகழ் ரெடின் கிங்ஸ்லி!

லிங்குசாமி இயக்கத்தில், ஸ்ரீநிவாசா வெள்ளித்திரை தயாரிப்பில் ராம் போதினேனி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம் ‘The Warrior’. இப்படத்தில் கிருத்தி ஷெட்டி, ஆதி பினிசெட்டி, அக்ஷரா கவுடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார்.

இப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க அல்லு அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது, பின்னர் சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போன நிலையில் ராம் போதினேனி இப்படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்தார். இப்படத்தில் ராம் போதினேனி போலீசாக நடிக்கிறார், இது வழக்கமான போலீஸ் சப்ஜெக்ட் படமாக அல்லாமல் வித்தியாசமான கோணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ‘RaPo19’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருந்த இப்படத்திற்கு சமீபத்தில் ‘The Warrior’ என்ற அதிகாரபூர்வமான தலைப்பு வைக்கப்பட்டது.

ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது, சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது, அதிக ரசிகர்களை கவர்ந்துள்ள காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி, இப்படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. இப்படத்தின் மூலம் இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் காமெடியால் ரசிகர்களை கவர்ந்த இவர், ‘டாக்டர்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தற்போது விஜயின் ‘பீஸ்ட்’ படத்திலும், சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் நடித்துள்ளார்.