செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி துணைத் தலைவராக செயலாற்றி வந்த அன்னகாமாட்சியும், 15வது வார்டில் உறுப்பினராக இருந்த எம்.சுருளி வேலும் இறந்த நிலையில் இந்த இரண்டு வார்டுகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் 9வது வார்டில் போட்டியிட்ட ரேவதியும், 15வது வார்டில் போட்டியிட்ட கணேசனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து துணை தலைவர் பதவிக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை 10:30 மணிக்கு செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் துணைத்தலைவர் பதவிக்கு கணேசன் மற்றும் அர்ஜுனன் ஆகிய உறுப்பினர்கள் போட்டி ஈடுகிறார்கள். இதனை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
காவல்துறை கூட்டத்தை தவிர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தேர்தல் தூங்கும் சமயத்தில் அர்ஜுனனின் வேட்புமனுவை கணேசன் கிழித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கணேசன் சமாதானப்படுத்தும் முயற்சியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் கணேசன், இந்த தேர்தலை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனெனில் நான் வேட்பாளர் என்றால் எனக்கு வாக்களிக்க வேண்டும் என உறுப்பினரிடம் கேட்க வேண்டும். அதற்கான கால அவகாசம் தேவை. அதனால் தேர்தல் நடந்த பிறகு உறுப்பினர்கள் அனைவரையும் கடத்திச்சென்று விட்டனர். இது ஜனநாயக விரோதம். எனவே இந்தத் தேர்தலை நடத்தக் கூடாது என்று கணேசன் வாக்குவாதம் செய்தார். இதனால் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.