வேடசந்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளராக பணி செய்து வரும் தங்கராஜ் அவரின் வீடுகளில் பதினோரு மணி நேரம் ஐந்துக்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை. சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக்கா டொக்குவீரன்பட்டியை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் தங்கராஜ் இவர் வேடச்சந்தூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளராக பணி செய்து வருகிறார். இவர் தான் பணிபுரியும் வேடசந்தூர் அரசு மருத்துவமனை அருகாமையில் உள்ள RH காலணியில் உள்ள தன்னுடைய சொந்த வீட்டில் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அதிகாலை 8 மணி அளவில் ஐந்துக்கு மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் முதல் கட்டமாக மருந்தாளர் தங்கராஜ் அவரின் சொந்த ஊரான டொக்குவீரன்பட்டியை உள்ள அவரின் வீட்டில் சோதனை நடைபெற்றது பின்பு அவர் தற்போது வசித்துவரும் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அருகாமையிலுள்ள RH காலணியில் உள்ள வீட்டில் ஐந்துக்கு மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் இரவு 8 மணி வரை தொடர்ந்து சோதனை செய்தனர்.
பின்பு சோதனை முடிந்த பின்னர் தங்கராஜ் அவரின் வீட்டில் இருந்து சில ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் தாங்கள் வந்த காரில் எடுத்துச் சென்றனர். இந்நிலையில் சோதனை முடிந்து வெளியில் வந்த சிபிஐ அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் எதற்காக சோதனை நடைபெற்றது என கேள்வி எழுப்பிய போது அதைக்குறித்து எந்த ஒரு பதில் சொல்லாமல் சிபிஐ அதிகாரிகள் கிளம்பி சென்றனர். மேலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தது குறித்து வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளராக பணி செய்து வரும் தங்கராஜ் அவர்களிடம் சோதனை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது பதில் சொல்ல மறுத்துவிட்டார். இந்நிலையில் வேடசந்தூரில் 11 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.