• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி…

“உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி…

தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய சுயசரிதையான “உங்களில் ஒருவன்” புத்தகத்தின் முதல் பாகம் வரும் பிப்.28ம் தேதி…

ஆனைமலையில் கோலாகலமாக நடைபெற்ற குண்டம் திருவிழா!

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. குண்டம் திருவிழாவின் ஒரு பகுதியான மயான பூஜை கடந்த 14ம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு மேல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 16ம் தேதி காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் சித்திரத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு மேல் குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று காலை சுமார் 9 மணியளவில் தலைமை பூசாரி குண்டம் முன்பாக சிறப்பு பூஜைகளை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் தமிழ்வாணன்,  புலவர் லோகநாதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து அம்மன் அருளாளி குண்டத்தில் பூப்பந்தை முதலில் உருட்டி விட்டார். அதன் பிறகு தலைமை பூசாரி, அருளாளிகள், முறைதாரர்கள் ஆகியோரைத் தொடர்ந்து பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்கினர். கொடியேற்றம் நாளில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டபடியே குண்டம் இறங்கினர். ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்த பிறகு, பெண் பக்தர்கள் குண்டத்தில் பூ அள்ளிக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கென ஏராளமான பெண் பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வேண்டுதலை நிறைவேற்றினர். குண்டம் இறங்கும் பகுதியில் தீயணைப்பு வாகனமும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அரசு மருத்துவர்கள், நர்சுகள் அங்கு அவசர தேவைகளுக்காக பணியமர்த்தப்பட்டனர்.  குண்டம் திருவிழாவுக்கென அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. வால்பாறை சரக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்ன காமணன், பரமேஸ்வரன், செல்வராஜ், கார்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார்,  தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், பெண் போலீசார்,  போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாளை (18ம் தேதி)  கொடி இறக்குதல்,  மஞ்சள் நீராடல்,  மகா முனி பூஜை  ஆகிய…

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை- விரைவில் புதிய சட்டம்

வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பணி நாட்களாக இருக்கும் என்பதற்கான சட்ட வரைவை பெல்ஜியம் அரசு கொண்டு வந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டிய தருணம் வந்துவிட்டதாக பிரதமர் அலெக்சாண்டர்…

எல்.ஐ.சி.,யில் உள்ள ரூ..21500 கோடி ரூபாய் பணம் யாருடையது ?

எல்ஐசி வசம் வாடிக்கையாளர்களின் உரிமை கோரப்படாத பணம் 21,500 கோடி ரூபாய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் 5% பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்நிலையில் பங்கு விற்பனை நடைமுறை தொடர்பான விரிவான அறிக்கையை…

யுஜிசி – நெட் தேர்வு குறித்த அறிவிப்பு..!

பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற…

ரஜினி மிஸ் செய்த சூப்பர்ஹிட் திரைப்படம்!

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் உள்ளது! இவரது திரைப்படம் தென்னிந்திய திரை அரங்குகளை தாண்டி வெளிநாட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்பது அனைவரும் அறிந்ததே! சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான்…

ராஜபாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள யானை தந்தங்கள் பறிமுதல்..,
தோப்பு காவல்காரர் கைது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான யானை தந்தங்களைப் பறிமுதல் செய்த வழக்கில், தோப்பின் காவல்காரர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கே அய்யனார் கோவில் சாலையில் புல்லுப்பத்தி மலை பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.…

திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் 4 பேர் மீது வழக்கு பதிவு

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வு கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. பொதுத் தேர்வு அடிப்படையில் இந்த தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் தேர்வு பெறுவதற்கு முன் கூட்டியே வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியயது.…

காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தை ரஷ்யாவில் கண்காட்சிக்கு வைக்க ஏறப்பாடு…

ஜெர்மனியில் 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் 60 லட்சம் யூத மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தார். அதே காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம்…

பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் மார்ச் 7-ம் தேதி முதல் நேரடி வகுப்பு

பிப்ரவரி 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை அரசு கலைக் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே நேரடியாக தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் நடத்திய…