மதுரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தீபாராதனை!
மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள, ஸ்ரீ காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு, ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் மற்றும் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகா ஸமேத ஸ்ரீ சந்திரசேகர மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது! திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்!
தூத்துக்குடியில் விசிட் அடிக்கும் பறவைகள்.., கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். கடலோர மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக இனப்பெருக்கத்திற்காக வருவதும், பின்னர் தங்களது நாடுகளுக்கு குஞ்சுகளுடன் புறப்பட்டு செல்வதும் வழக்கம். அதன்படி…
பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தின் அவல நிலை …கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகள்..
பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்திற்கு மட்டும் ஏன் இந்த அநியாயம்? – அலட்சியத்தில் பல அரசியல்வாதிகள், ஆணவத்தில் பல அதிகாரிகள், ஊமையாகிப் போன பல ஊடகங்கள், செய்வதிறியாத நிலையில் பொதுமக்கள்¡ இந்திய ரயில்வே, தமிழகத்தின் பல்வேறு ரயில் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதை…
மதுரையில் ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணுக்குப் பிரசவம்..!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஓடும் ஆம்புலன்ஸிலேயே அழகான ஆண்குழந்தை பிறந்ததையடுத்து, மருத்துவ உதவியாளருக்கும், ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த வளர்மதி என்ற கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ…
மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு..,
பா.ம.க சார்பில் ஆலோசனைக் கூட்டம்..!
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மதுரை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், அதிகபட்ச இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் கிட்டு தலைமையிலும் மாவட்ட செயலாளர்கள் செல்வம்…
மதுரை அரசு பள்ளிகளில் படித்த 17 மாணவ மாணவிகள் மருத்துவர் படிப்புக்கு தகுதி..!
மதுரையில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய 17 மாணவ மாணவியர் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். மருத்துவ படிப்புக்கான நீட் தகுதித்தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம்…
கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து..!
கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வரும்…
மதுரையில் சொத்தை அபகரித்துக் கொண்டு தாயை பரிதவிக்க விட்ட மகன்கள்..,
மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த மூதாட்டி..!
மதுரையில் சொத்தை அபகரித்துக் கொண்டு 75 வயதான மூதாட்டியை பரிதவிக்க விட்டு, வீட்டை விட்டு துரத்திய மகன்கள் மீது மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தாய் புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வண்டியூரைச் சேர்ந்தவர் மூதாட்டி லெட்சுமி (75). இவரது…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதா..,
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிக்கை..!
தமிழகத்தில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி முழு ஊரடங்கை அறிவித்த தமிழக அரசு தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, இரவு நேர ஊரடங்கு ரத்து, பள்ளிகள் திறப்பு என அனைத்தையும் ரத்து செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தே.மு.தி.க பொதுச்செயலாளர்…
தனித்து குதித்துள்ளது மக்கள் நீதி மையம்..
நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி தனித்து நின்று சரிக்கு சரியாக போட்டியிட உள்ளது.தற்போது இத்தேர்தலில் போட்டியிட இருக்கும் 3-ஆம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்…