• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 132 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 132 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 132 கோடிக்கும் மேற்பட்ட (1,32,33,15,050) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 22.72 கோடிக்கும் மேற்பட்ட (22,72,19,901) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 119.38 கோடியைக் கடந்தது

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 90,27,638 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 119.38 கோடியைக் (1,19,38,44,741) கடந்தது. 1,23,73,056 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  10,264 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர்…

தொடரும் வரதட்சணை கொடுமைகள் – இன்னொரு உயிரை பலிகொடுத்த கேரளம்

கேரள மாநிலம் ஆலுவா பகுதியை சேர்ந்தவர் மோபியா பர்வீன். இவர் தொடுபுழாவில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது முகமது சுஹைல் என்பவர் காதலித்து, கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். சுஹைல் துபாயில் பணியாற்றி வருவதாக மோபியாவிடமும்…

செவிலியர் அடித்துக் கொலை – தீவிர விசாரணையில் போலீசார்

ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியில் அரசு மருத்துவமனை செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்(44). இவர் திண்டுக்கல்லில் தங்கி கேட்டரிங்…

*வீடு தேடி கல்வி திட்டம் – கலைப்பயண வாகனத்தை துவக்கி வைத்த சேலம் ஆட்சியர்*

வீடு தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலைப்பயண வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழக முழுவதும் கொரானா காலத்தில் கட்டங்களில் இடைநின்ற குழந்தைகளுக்கும் மாணவ-மாணவிகள் கல்வி கற்கும் வகையில் வீடுதேடி கல்வித் திட்டத்தை தமிழக முதலமைச்சர்…

கவிழ்ந்த அகதிகள் படகு – 31 பேர் உயிரிழப்பு

பிரிட்டன் நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற அகதிகள் படகு, ஆங்கில கால்வாயில் நேற்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 31 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான், ஈராக், எரித்ரியா மற்றும் சூடான் போன்ற நாடுகளில்…

சேலம் சிலிண்டர் வெடி விபத்து – வழங்கப்பட்ட நிவாரண உதவிகள்

சேலத்தில் சிலிண்டர் வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. சேலம் கருங்கல்பட்டியில் நேற்று முன் தினம் நிகழ்ந்த எரிவாயு சிலிண்டர் வெடி விபத்தில் தீயணைப்பு வீரர் பத்மநாபன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 வயது…

பிரதமர் மோடியுடன் மம்தா திடீர் சந்திப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று திடீரென டெல்லி வந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். மாநில விவகாரங்கள் தொடர்பாக பிரதமருடன் பேசியதாக மம்தா கூறி உள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா செய்தியாளர்களை…

என்னது தன்னை தானே திருமணம் செஞ்சிக்கிட்டாங்களா..?பிரேசில் மாடல் அழகி

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் 31 வயதான மாடல் அழகி கிறிஸ் கலேரா. கடந்த காலங்களில் உறவு முறிவுகளால் ஏற்பட்ட விரக்தி காரணமாக தன்னை தானே திருமணம் செய்துகொள்ள அவர் முடிவெடுத்தார். அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில்…

அம்பேத்கர் சிலை உடைப்பு-கான்பூரில் பதற்றம்

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் பகுதியில் அம்பேத்கர் சிலையை அடையாளம் தெரியாத சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால், உள்ளூர் அரசியல்வாதிகளுடன் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ராணிப்பூர் சாலையை வழி மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…