இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 122.41 கோடியைக் கடந்தது
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 42,04,171 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 121.41 கோடியைக் (1,22,41,68,929) கடந்தது. 1,26,81,072 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,905 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர்…
கொரோனா பரிசோதனைக்கு பயந்து தெறித்து ஓடிய வடமாநிலத்தவர்கள்
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களை போலவே வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் வேலை செய்து வருகிறார்கள். வேலைவாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால் திருப்பூருக்கு பலரும் வேலை தேடி வருகிறார்கள். இந்நிலையில், கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு…
மக்களவை ஒத்திவைப்பு…நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சலசலப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் பல்வேறு அமர்வுகளிலும் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. குறிப்பாக, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா இன்று நாடாளுமன்றத்தில்…
பிரசவ வலியுடன் சைக்கிளில் ஜாலியாக ஆஸ்பத்திரி சென்ற எம்.பி.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்து, 2006-ம் ஆண்டில் நியூசிலாந்தில் குடியேறிய ஜூலி அன்னே ஜெண்டர். இவர் தற்போது, நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே ஆஸ்பத்திரி இருப்பதால்…
ஊரடங்கு நீடிக்குமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
தமிழகத்தில் நாளை ஊரடங்கு முடிய உள்ள நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.கடந்த மே மாதம் பாதிப்பு உச்சத்தை அடைந்த நிலையில், முழு…
கலைஞர் உணவகத்தை வரவேற்பதாக செல்லூர் கே.ராஜூ பேச்சு
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் மதுரை அதிமுகவினரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விருப்ப மனுக்களை வாங்கினார். ஏராளமான அதிமுகவினர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த நிகழ்வில், முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.அதன் பின்னர் செய்தியாளர்களிடம்…
ஒமிக்ரான் வைரஸ் குறித்து ஆட்சியர்களுடன் இறையன்பு ஆலோசனை
ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார். தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசான ஒமிக்ரான் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கான விமான சேவைகளையும் ரத்து…
*நெதர்லாந்து மற்றும் கனடாவில் பரவிய ஒமிக்ரான் *
தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேலியா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், ஜப்பான்,…
3 முறை கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஐ.எஸ்.ஐ.எஸ்
பாஜக எம்.பியு மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர் பயங்கரவாத அமைப்பு கொலை மிரட்டல் அடுத்தடுத்து விடுக்கப்பட்டு வருகிறது. ஒரே வாரத்தில் 3-வது முறையாக கவுதம் கம்பீருக்கு பயங்கரவாதிகள் பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு…
இந்திய பெருங்கடலில் சாகசம் – கடலோர காவல்படை வீரர்களின் கூட்டு பயிற்சி
இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய 3 நாடுகளின் கடலோர காவல்படை சார்பில் ‘தோஸ்தி’ என்ற பெயரில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டு பயிற்சி நடைபெருவது வழக்கம். அப்படி இந்தவருடம் 30-வது ஆண்டை எட்டியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பை வலுப்படுத்துதல், பரஸ்பர…