குரூப் 4 தேர்வில் பணியிடங்கள் அதிகரிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வில், கூடுதலாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள பணியிடங்களான, கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர், இளநிலை நிர்வாகி,…
ரத்தன்டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
பிரபல தொழிலதிபர் ரத்தன்டாடா மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதுடன், அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா நேற்று (புதன்கிழமை) இரவு 11 மணியளவில் உயிரிழந்தார்.…
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,“திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-இன் கீழ்…
சாம்சங் நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேற வாய்ப்பு
சாம்சங் நிறுவன ஊழியர்கள் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், சாம்சங் நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி…
தொடர் விடுமுறை எதிரொலி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி என தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,“ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு…
கேரளாவில் டூவீலரில் செல்லும் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்
கேரளாவில் டூவீலரில் செல்லும் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் காரின் முன் இருக்கையில் தாயின் மடியில் அமர்ந்திருந்த 2 வயது குழந்தை ஏர்பேக் அமுக்கி மூச்சுத் திணறி…
அரபிக்கடலில் புதிய புயல் சின்னம்: கனமழைக்கு வாய்ப்பு
அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று அரபிக்கடலில் புதிய புயல் சின்னம்…
தொண்டர்களின்றி நடைபெற்ற அதிமுக மனிதசங்கிலி போராட்டம்
தமிழகம் முழுவதும் அதிமுச சார்பில், திமுக அரசைக் கண்டித்து இன்று நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டம் தொண்டர்களின்றி நடைபெற்றிருப்பது. அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர், கழிவு நீர்…
பத்திரப்பதிவுத்துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் : தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
பத்திரப்பதிவுத்துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் செய்வதற்கு எதிரான வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.பத்திரப்பதிவுத்துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனங்கள் குறித்து மதுரையைச் சேர்ந்த பிரமுகர் முகமது மஜீத் என்பவர்…
சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்
நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் பூக்கள் பூத்துக் குலுங்குவதால் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது இதமான காலநிலைநிலவி வருகிறது. மேலும் சாரல் மழை பெய்து வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குன்னூரில்…




