சிவகங்கையில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடக்கம்..!
சிவகங்கையில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி, மதுரை, கோவில்பட்டி, சிவகங்கை, ராஜபாளையம் அணிகள் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளன.சிவகங்கையில் நேற்று துவங்கிய மாநில அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டிகள் மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. சிவகங்கை சேர்ந்த மாநில…
தமிழக உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் புதிய ஆணை பிறப்பித்த ஒரே நாளில் அதிரடி நடவடிக்கை..!
தடை செய்யப்பட்ட புகையிலை, போதை பொருட்களை விற்பனை செய்த கடைக்கு தமிழகத்திலேயே முதல் முறையாக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து 15 நாட்கள் கடையை பூட்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்… தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் புதிய உத்தரவில்…
சிவகங்கை நகரில் திமுக மகளிர் அணி சார்பில், கனிமொழி பிறந்தநாள் விழா..! முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கி கொண்டாட்டம்..!
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள அன்னை முதியோர் இல்லத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி கனிமொழி அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன் ஏற்பாட்டில் மாவட்ட மகளிர்…
சிவகங்கை இடையமேலூர் மாயாண்டி சித்தரின் 17ஆம் ஆண்டு குருபூஜை விழா… ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு..,
சிவகங்கை அருகே இடையமேலூரில் ஶ்ரீலஶ்ரீ மாயாண்டி சித்தரின் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம், உத்திர நட்சத்திரத்தில் மாயாண்டி சித்தர் ஜீவசமாதி அடைந்த தினத்தை குருபூஜை விழாவாக அவரது பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். 17 ஆம் ஆண்டாக நடைபெறும்…
சிவகங்கையில் நாடாளுமன்ற பொது தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடைமுறைப்படுத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் 2024 ஆம் நாடாளுமன்ற பொது தேர்தலில் மீண்டும் வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்தவும், தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள…
ராணி வேலு நாச்சியார்294-வது பிறந்த நாள் விழா..! சிவகங்கை MLA, ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை..,
ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்திய சுதந்திர போரை தொடங்கி வெற்றி கண்டவர் ராணி வேலுநாச்சியார். இவருக்கு தமிழக அரசின் சார்பில் சிவகங்கை பையூர் பகுதியில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அரசு விழாவாகவும் நடத்தி வருகிறது.…
திருநகர் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை, நூற்பு ஆலை நிர்வாகம் அடைத்ததால் ஆர்ப்பாட்டம்…
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள திருநகர் பகுதியில் காளீஸ்வரர் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான நூற்பு ஆலை ஒன்று சுமார் 77 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது அந்த நுட்ப ஆலைக்கு எதிர்புறத்தில் திருநகர் பகுதியைச் சேர்ந்த சுமார்…
சிவகங்கையில் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு.., அனைத்துக் கட்சியினர் அஞ்சலி..!
சிவகங்கையில், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அனைத்துக் கட்சியினர் மௌன ஊர்வலம் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.தேமுதிக கட்சித் தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆன விஜயகாந்த் இன்று காலை காலமானார் அவரது மறைவு செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது இந்நிலையில்…
கிருங்காங்கோட்டையில் பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கிருங்காங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் மேனேஜராக பணிபுரியும் மல்லிகா என்பவரை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து மானாமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பிரச்சனை தொடர்பாக நான்கு…
வீர பேரரசி வேலுநாச்சியாரின் 227வது நினைவு தினம். வாரிசுதாரர், சமுதாய தலைவர்கள், அரசியல்கட்சி பிரமுகர்கள், மாலை அனிவித்து மரியாதை
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையை ஆண்ட வீர பேரரசி வேலுநாச்சியாரின் 227 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அவரது வாரிசுதாரர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்று மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர். சிவகங்கை சீமையை ஆண்டு…








