ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாத இறுதியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது..

இந்நிலையில் கோவையில் உள்ள யூனியன் வங்கி மண்டல அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்பிணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது..
இதில் யூனியன் வங்கியின் மண்டல தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமை வகித்து பேசினார்..

விழாவில் சிறப்பு விருந்தினராக பிரிக்கால் நிறுவனத்தின் சேர் பெர்சன்,சிறு துளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கலந்து கொண்டு பேசினார்..
அப்போது பேசிய அவர்,சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என கூறிய அவர்,எதிர்கால சந்ததிகளுக்கு மட்டுமின்றி தற்போது உள்ள தலைமுறைக்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம் என தெரிவித்தார்..

சுத்தமான காற்று நம் எல்லா தலைமுறைக்கும் தவிர்க்க முடியாத தேவை என குறிப்பிட்ட அவர்,அதற்கு தேவையான மரங்களை வளர்ப்பதும்,நீர் நிலைகளை காப்பதும் மனித குலத்திற்கு மிகவும் தேவையாக இருப்பதாக கூறினார்..

விழாவின் இறுதியில் யூனியன் வங்கியின் கோவை பிராந்திய தலைவர் லாவண்யா நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் யூனியன் வங்கியின் கோவை மண்டல,பிராந்திய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)