• Sat. Apr 20th, 2024

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் சார்பட்டா பரம்பரை சந்தோஷ் ?

Byகுமார்

Sep 16, 2021

ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ். விரைவில் தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன் 5 -கான புரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து பிக்பாஸ் 5 சீசனில் ஜிபி முத்து, இம்மான் அண்ணாச்சி கலந்துக் கொள்ள போகிறார்கள் என பலரின் பெயர்கள் இணையத்தில் வலம் வருகின்றன.

இந்நிலையில், சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் பிரதாப் இதற்கு முன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், தாயம், பயமா இருக்கு, பஞ்சராக்‌ஷரம், ஓமை கடவுளே, இரும்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *