• Sat. Apr 20th, 2024

தாமரைக்குளத்தில், அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படும் பயனாளி!

தேனி மாவட்டம், தாமரைக்குளம் பேரூராட்சி 8-வது வார்டு பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர், புதுகாலனி பகுதியில் 737/22 எண் கொண்ட பிளாட்டில் உள்ள வீடு ஒன்றுக்கு, பெயர் விபரம் அறிய வேண்டி, நவம்பர் 20ம் தேதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்! ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை என்று முருகேசன் குற்றம் சாட்டியுள்ளார்!

இதுகுறித்து, முருகேசன் கூறுகையில், “தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கட்டடத்தின் விபரம் அறிய டிசம்பர் மாதம் நான்காவது வாரத்தில், தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலகத்திற்கு நேரடியாகவே சென்று செயல் அலுவலரை சந்தித்து முறையிட்டேன். செயல் அலுவலர் தகவலை உடனடியாக அனுப்புமாறு வெற்றிச்செல்வன் என்ற அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், 2022 ஜனவரி 5, 12 மற்றும் 13 தேதிகளில் செயல் அலுவலரை அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்பொழுது அனுப்புகிறேன், இப்பொழுது அனுப்புகிறேன் என்று மழுப்பும் வகையில் பதில் கூறி வந்தார்! இறுதியாக ஜனவரி 10ஆம் தேதி அலைபேசியில் இவரை தொடர்பு கொண்டு RTI பதில் இன்னும் வரவில்லை சார் என்ற போது “இப்ப என்ன சொல்றீங்க” என மிரட்டும் தொனியில் பதிலளித்தார்.

இந்நிலையில் 10.01.2022 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு வருகை புரிந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட மாநில ஆணையர் பிரதாப்குமாரை சந்தித்து, வெற்றிச்செல்வன் மீது புகார் செய்தேன். ஆனாலும் ஜனவரி 19ம் தேதி வரை மேற்படி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

எனவே என்னை அலைக்கழிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்க்கத்தோடுதான் இவ்வாறு செய்கின்றனர்!இன்றுவரை தகவலை தராமல் உள்ள தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலர் வெற்றிச்செல்வன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்றார்!

முன்னதாக, தேனி மாவட்டத்தில் நீதித்துறை மற்றும் காவல்துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை தந்து சிறப்பாக செயல்படுகின்றன என்றும் பெரியகுளம் ஒன்றியம் தாமரைக்குளம் பேருராட்சியில் கேட்கப்பட்ட விபரங்களை தர மறுத்து அலைக்கழிப்பு செய்வதாகவும் புகார் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *