டேலியா என்ற பூவை இளம்பெண்கள் சூடிக் கொள்வது மிக நெருக்கமான இதழ்களைக் கொண்ட இந்த மலரின் ஈர்ப்பு சக்தியால் மயங்காத பெண்கள் இல்லை என்று சொல்லலாம் அமெரிக்கா கொலம்பியா மெக்சிகோ போன்ற நாடுகளில் விளையக்கூடிய இந்த டேலியா பூச்செடியின் தாவரவியல் பெயர் ஸ்வீடன் தாவரவியலாளர் ஆண்டர்ஸ் டால் பெயரே சூட்டினார்.
ஆஸ்திரே சியா தாவர குடும்பத்தில் வந்தது இந்த மலர் எந்த வாசமும் இல்லாத இந்த மலரின் வசீகரம் சிலரை சுண்டி இருக்கத்தான் செய்யும் அதனால் இளம் பெண்களும் சிறுமிகளும் தங்கள் தலையில் சூடாமல் இருக்க மாட்டார்கள் இந்த மலர் கொடைக்கானலில் பூத்துக்குலுங்க துவங்கியுள்ளது விற்பனைக்காக பல ஊர்களில் உள்ள சந்தைகளுக்கு அனுப்பு பட்டாலும் திண்டுக்கல் நகரத்தில் இந்த பூவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது மூன்று பூக்களின் விலை 20 க்கு விற்கப்படுகிறது.