திண்டுக்கல்லில் தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்கத்தி;ன் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் மு.அன்பரசு தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற மாநில பொதுச்செயலாளர் துரைசிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்
தமிழ்நாடு எங்கும் பணியாற்றக்கூடிய ஒட்டு மொத்த அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை வழங்க வேண்டும். சமூக நலத்துறையில் பணியாற்றக்கூடிய சத்துணவு ஊழியர்கள் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் பெறப்படாதவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும். பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் துறைகளை ஒன்றிணைந்து ஒரே துறையாக மாற்ற வேண்டும் என்று
க.துரைசிங் கேட்டுக்கொண்டுள்ளார். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக கருணை அடிப்படையில் இத்துறையில் பணியாற்றி இறந்து போனவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.