1905ம் ஆண்டு இதே நாளில் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிராக சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் நினைவாக இந்த நாளை நாம் தேசிய கைத்தறி தினமாக கொண்டாடுகிறோம். இந்தியாவில் குறிப்பாக கிராமப்புறத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை தரக்கூடிய தொழிழலாக கைத்தறி உள்ளது. இந்த தொழிலில் 70 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் உள்ளனர். எனவே இந்த தொழில் பெண்களை அதிகார்ப்படுத்துவதற்கும் பயன்படுவதாக சொல்ல முடியும். கைத்தறி தொழில் கிடையாது. நமது கலாச்சாரத்தின் பண்பாட்டின் அடையாளமாக உள்ளது. இந்தியாவில் ஏற்றுமதியில் 4வது இடம் பிடித்துள்ள கரூரை பிரதிநிதித்துவப்படுத்துகிற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற முறையில் பெருமை படுகிறேன். எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் கைத்தறி சேலை மீது விருப்பம் இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. நெசவாளர்களுக்கு, நெசவு கலைஞர்களுக்கு அவர்களின் கனவுகளுக்கு வடிவம் கொடுப்பதற்கு நாம் வழிவகை செய்ய வேண்டும் என்று உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று ஜோதிமணி கேட்டுக்கொண்டார்.