• Wed. Apr 24th, 2024

சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி திராவிடமா?

ByIlaMurugesan

Aug 7, 2021

உலகில் மிக தொன்மையான நாகரீகங்களில் ஒன்று சிந்துசமவெளி நாகரீகம் ஆகும். தொல்லியல் ஆய்வாளர்களால் வெண்கல காலம் என்றுசொல்லக்கூடிய கி.மு.3300 முதல் கி.மு. 1900 ஆண்டு காலத்தைச் சேர்ந்தது இந்த நாகரீகம் என குறிப்பிடப்படுகிறது. இன்றைக்கு இந்த நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் யார் என்பதே பலரது கேள்வியாக உள்ளது. பாகிஸ்தான மற்றும் இந்தியா பகுதிகளில் சிந்து நதியின் கரையோரங்களில் வாழ்ந்த மக்களின் நாகரீகமாக விளங்குகிறது. சிந்து வெளியில் கிடைக்கப்பெற்ற குறியீடுகளை இன்றுவரை யாராலும் வாசித்தறிய முடியாத மொழியாக உள்ளது. இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆரியர்கள் என்று ஒரு சாராரும் திராவிடர்கள் என்று ஒரு சாராரும் தமிழகத்தைச் சேர்ந்த சில பரபரப்பு அரசியல் வாதிகளால் தமிழர்களே என்ற கருத்து முன்மொழியப்படுகிறது.
ஆரியர்கள் ஆப்கானியர்கள் துருக்கியர்கள் முகலாயர்கள் இந்து

மலைப்பகுதியில் உள்ள பைகர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய பிறகே சிந்து வெளிநாகரீகம் வீழ்ச்சியடைந்தது. மேற்கண்ட நாடோடிச் சமூகங்களை விட சிந்து வெளி மக்கள் நகர நாகரீகங்களில் சிறந்து விளங்கினர் என்பதாலும், விவசாயத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பதால் இரு தரப்பினரிடையே நடைபெற்ற போர்களில் சிந்து வெளி மக்கள் அழிவுக்குள்ளானார்கள் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இன்றைக்கு சிந்து சமவெளிப்பகுதியில் வாழ்கிற மக்கள் பேசுகிற மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் பேசப்படுகின்றன. சிந்துவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்த காலக்கட்டத்திற்கு பிறகு இந்தோ ஐரோப்பிய மொழி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருப்பதால் இங்கு பேசப்பட்ட மொழி திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழியாக இருக்கலாம் என்று பல தொல்லியாளர்கள் கருதுகிறார்கள். மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பாஜக நிர்வாகம் சிந்துவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என்பதை நிறுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்ட வருகிறது. அதற்காக வட இந்திய தொல்லியல் ஆய்வாளர்கள் பெரு முயற்சி எடுத்து வருகிறார்கள். கடந்த 150 ஆண்டுகளாக சிந்து வெளி நாகரீகம் வேதகால பண்பாடு என்று வட இந்தியர்களால் திரும்ப திரும்ப பேசப்பட்டு வந்தது திராவிட பண்பாடும் வேதகால பண்பாட்டின் ஒரு அங்கம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இன்றைக்கு ஒன்றிய அரசால் இது சரஸ்வதி நாகரீகம் என்று சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் அங்கு பேசப்பட்ட மொழி திராவிட மொழியாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாட்டில் பிரபல வரலாற்று பேராசிரியர் கருணானந்தன் கூறும் போது
1920 முதல் 1934 வரை சர் ஜான் மார்சல் தலைமையிலான குழு முதன் முதலில் அகழாய்வு மேற்கொண்டது. அவர் கொடுத்த அறிக்கையில் இது ஆரியர்களின் வேதகாலத்திற்கு முற்பட்டது என்றும் ஆரியர்களுக்கும் இந்த நாகரீகத்திற்கும் தொடர்பு கிடையாது இது தனித்துவம் மிக்க வேறு ஒரு நாகரீகம். இங்கே கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் ஒரு மாபெரும் நாகரீகத்தின் எச்சங்கள். அது திராவிட நாகரீகம் என்று சொன்னார். சர் ஜான் மார்சல் இந்தியாவில் அகழாய்வு செய்ய இந்தியர்களுக்கு பயிற்சியளித்தவர். கிரேக்கம் எகிப்து கிரேட்டன் போன்ற நாகரீகங்களை அகழாய்வு செய்த உலகம் மதித்த ஒரு அகழாய்வாளர். 2007ம் ஆண்டு மயிலாடுதுறையில் ஒரு கற்கோடாறி கண்டெடுக்கப்பட்டது. அதில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களை ஆராய்ந்த ஐராவதம் மகாதேவன் அந்த குறியீடு சிந்துவெளி குறியீடு என்றும் தமிழ் மொழியும் சிந்து மொழியும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது என்றார். இதே போல காவேரி கழிமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள்தாழிகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் சிந்து சமவெளி எழுத்துக்களோடு ஒத்துப்போவதாகவும் தெரிவித்தார்.
சமீபத்தில் பகாதா அன்சுமாலி மொகபாத்யாயா என்பவர் இது தொடர்பாக ஆய்வு கட்டுரை ஒன்றை நேச்சர் குரப் ஆப் ஜேர்னல் என்ற பத்திரிக்கையில் அனுப்பி பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டுரையில் சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி திராவிட மொழியாக இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். இங்குள்ள தமிழ் தேசியவாதிகள் சிந்துவெளியில் பேசப்பட்டது தமிழாக இருக்கலாம் என்று ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் திராவிட மொழி என்று ஏற்க மறுக்கிற போக்கு உள்ளது. தமிழ் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது என்பதையும் தமிழர்கள் திராவிட சமூகம் எனப்படுகிற தனி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் மறுக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *