• Tue. Dec 10th, 2024

சிக்கியது முக்கிய ஆவணங்கள்… சிக்கலில் எஸ்.பி.வேலுமணி!…

ByIlaMurugesan

Aug 10, 2021

முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி வீடு மற்றும் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாநகராட்சிகளில் நடைபெற்ற டெண்டர்களில் கிட்டத்தட்ட 800 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் 464 கோடி டெண்டரில் நடைபெற்ற முறைகேடு கோவை மாநகராட்சியில் 346 கோடி டெண்டரில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து என கிட்டத்தட்ட 800 கோடி டெண்டர் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த ஊழல் வழக்குகளில் மாநகராட்சி அதிகாரிகளை சாட்சிகளாக சேர்க்கவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டு உள்ளனர். ஏற்கனவே 3 பிரிவுகளில் 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
சென்னையில் உள்ள எம்.எல்ஏ விடுதியில் வைத்து முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் குற்றவாளியாக வழக்கு பதியப்பட்டு அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரது நண்பர்கள் வீடுகளிலும் விசாரணை செய்து வருகிறார்கள். காலை 6 மணிக்கு துவங்கிய இந்த விசாரணை 4 மணி நேரமாக விசாரித்து வருகிறார்கள்.

கோவை, மற்றும் சென்னை, வேளச்சேரி, தேனாம்பேட்டி, சீத்தாம்மாள் காலனி, உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மதுக்கரையில் பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகராஜா வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. சி.ஆர். கன்ஸ்ட்ரக்சன் ராஜன், எஸ்.பி. பில்டர்ஸ் முருகேசன், சேசு ராபர்ட் ராஜா, கே.சி.பி. என்ஜினியரிங். சந்திரபிரகாஷ், சந்திரசேகரன், செந்தில் அண்ட் கோ பங்குதாரர் அன்பரசன் உள்ளிட்ட பலர் வீடு மற்றும் நிறுவனங்களில் சோதனை நடைபெறுகிறது

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் வீட்டில் ஆவணங்கள் சிக்கின.
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் அவரது நெருக்கமான நண்பர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது. வடபழனியில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. வரவு செலவு புத்தகங்கள் கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள்.