• Fri. Apr 18th, 2025

கீழடியில் பழமையான கல்தூண் கண்டுபிடிப்பு!….

ByIlaMurugesan

Aug 11, 2021

கீழடியில் 7ம் கட்ட அகழாய்வில் பழமையான கல் தூண் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது.

காதில் அணியும் தங்க வளையம்,கற்கோடாரி, மண்பானை, நெசவுத் தொழிலுக்கு பயன்படும் தக்களி, உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அகரத்தில் ஒரு அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்ட கல் தூண் கண்டறியப்பட்டுள்ளது. இதனை மேலும் அகழாய்வு செய்யும் போது அதன்; உயரம் கூடுமென தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.